பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பான விசாரணை செயன்முறை குறித்து ஏனையோரை விடவும் புலனாய்வுப்பிரிவு பிரதானியாகப் பதவி வகித்த சுரேஷ் சலேவுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையிலேயே எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றால், இந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே அவர் செய்யக்கூடிய சிறந்த விடயமாகும். மாறாக அவர் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, விசாரணை செயன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால், இத்தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடுமோ எனும் சந்தேகம் எழுகிறது என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.













