Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும் என்றும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநருக்கு எதிரான உத்தரவு

மேலும் அந்தக் கடிதத்தில், யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக எங்களது முழுமையான அதிர்ச்சியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதற்காக இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம் | Jaffna High Court Judge Transfer Letter To Anura

அலெக்ஸ்ராஜா கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் (2026.05.31 முதல் நடைமுறைக்குவரும் வகையில்) அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, அந்த இடமாற்றத்துக்குப் பின்னால் புறக்காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எங்களது உறுப்பினர்களிடமிருந்து நம்பகமான தகவல்களின் அடிப்படையில், வட மாகாண ஆளுநருக்கு எதிராக நீதிபதி சில உத்தரவுகளை வழங்கியிருந்தமையே இந்த இடமாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அறிகிறோம். அந்த வழக்குகளில் ஆளுநர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார். (அந்த உத்தரவுகள் பின்னர் இரத்து செய்யப்பட்டதுடன், அவை நீட்டிக்கப்படவும் இல்லை.)

நீதித்துறை சேவைகள் ஆணைக்குழு

மேலும், வடக்கு ஆளுநர் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட சில அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தலையீட்டை நாடினார் என்றும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளோம்.

நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவின் நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம் | Jaffna High Court Judge Transfer Letter To Anura

எனினும், நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்வார்.

நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றதாக சிறிதளவு தோற்றமளிப்பதுகூட மிகக் கடுமையான விடயமாகும். நாட்டின் தலைவராக, இத்தகைய தலையீடுகளுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு உங்களுக்குள்ளது.

இந்த விடயத்தை மிக உயர்ந்த முன்னுரிமையுடன் விசாரிக்குமாறு வலியுறுத்துகிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நேரில் விளக்குவதற்காக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 2, 2026
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures