Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். நகரப் பிரதேசத்திற்கு முறையான வடிகாலமைப்பு திட்டம் மீளவும் தயாரிக்கப்படல் வேண்டும் ; கஜேந்திரகுமார் வேண்டுகோள்

May 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

யாழ். நகரப் பிரதேசத்திற்கு முறையான வடிகாலமைப்பு பிரதான திட்டம் மீளவும் தயாரிக்கப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  செவ்வாய்க்கிழமை (26) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை தலைமை அலுவலகத்தால் யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிப்பதில் பாரிய மோசடி இடம்பெற்றது.

அம்மோசடிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அம்பலப்படுத்தப்பட்டபோதும் கடந்த 2020 காலப்பகுதியில் யாழ்மாநகர சபையை ஆட்சி செய்த தரப்புக்களால் மூடிமறைக்கப்பட்டது.

அப்போதய ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தவரது ஆதரவுடன் மாநகர மேயராக கதிரை ஏறி தமது பதவிப் பசியை தீர்த்துக் கொண்டவர்கள், கோட்டா அரசின் ஊழலை மறைப்பதற்காக இவ் ழலை மூடிமறைத்தார்கள். அதனால் 1375 கோடியில் புதுப்பொலிவுடன் மிளிர்ந்திருக்க வேண்டிய யாழ்நகரம் பாழாய்க் கிடக்கிறது.

எனவே தனிதனியாக திட்டங்களை தெரிவு செய்யாது யாழ்நகருக்கு என்று திட்டத்தை தயார்செய்து அதனை வைத்து பகுதி பகுதியான திட்டங்களை செய்யவேண்டும் என்றார்.

Previous Post

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் – கட்சிகள் வலியுறுத்தல்

Next Post

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையில் சந்திப்பு

Next Post
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையில் சந்திப்பு

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையில் சந்திப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures