Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாணசபை தேர்தலை அரசு நடத்தாது என்பது உறுதி – அகிலவிராஜ்

May 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல்கள் உரிய காலத்தில் நடக்காமல் இருக்கும்போது, அது தொடர்பில் அப்போது இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக செயற்பட்டது மக்கள் விடுதலை முன்னணியாகும். அதேநேரம் அனைத்து தேர்தல்களையும் படிப்படியாக நடத்துவோம் என்றே இவர்கள் ஆட்சிக்கு வந்ததுடன் தெரிவித்தார்கள். அதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தினார்கள். ஆனால் அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலுக்கு உடனே செல்லப்போவதில்லை என்பது யாரும் அறிந்த விடயம்.

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாக இருந்தால், மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்கு சட்ட திருத்தம் கொண்டுவந்து, தேர்தலை நடத்தலாம். அதற்கான பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தற்போது இதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்திருக்கிறது. இது எந்தளவு சாத்தியமாகும் என தெரியாது. 

அதேநேரம் அரசாங்கம் இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் மாகாணசபை தேர்தலடி நடத்துவதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறது. அதேநேரம் தித்வா புயல் அனர்த்த பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மாகாணசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தித்வா புயல் அனர்த்த நிவாரணத்துக்கு ஒதுக்கியதாக ரில்வின் சில்வா தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் இந்த அரசாங்கத்தில் எந்த பதவியிலும் இல்லை.

எவ்வாறு இருந்தாலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. காலத்தை கடத்துவதற்கே ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் அடுத்த வருடமும் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தற்போது ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார் என்றார்.

Previous Post

எரிபொருள் விலை உயர்வு நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் – சஜித் எச்சரிக்கை

Next Post

தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

Next Post
தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures