Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜூலை மாதத்தில் வெளியாகும் நடிகர் மாதவனின் ‘G.D.N – ஜி டி நாயுடு’

May 23, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜூலை மாதத்தில் வெளியாகும் நடிகர் மாதவனின் ‘G.D.N – ஜி டி நாயுடு’

பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைசிறந்த விஞ்ஞானியான ஜி டி நாயுடுவாக நடித்திருக்கும் ‘ஜி டி என்- ஜி டி நாயுடு’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும் ,இயக்குனருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜி டி என்- ஜி டி நாயுடு’ திரைப்படத்தில் மாதவன், சத்யராஜ் , ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தமிழகத்தில் வாழ்ந்து சாதனை படைத்த விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுய சரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன்- விஜய் மூலன்- சரிதா மாதவன் – ஆர். மாதவன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இதனிடையே விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு தழுவி மாதவன் நடிப்பில் வெளியாவதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், தென்னிந்திய திரையுலக வணிகர்களிடத்திலும் அதீதமாக ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஜய் அண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

ஆசிரியர் இடமாற்றத்தினால் அழிக்கப்படும் வடமாகாணக் கல்வி : கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு!

Next Post
இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

ஆசிரியர் இடமாற்றத்தினால் அழிக்கப்படும் வடமாகாணக் கல்வி : கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures