Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் | முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை

May 10, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு  மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளர்.

தமிழ்த் தேசியப் பேரவை தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) தமிழ் நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதல் தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கீழ்வரும் கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம்.  

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009 ற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களது மேற்படி நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டிருந்தது.

அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லை ஆயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று,  அதன் முதலாவது தேர்தலில் பெரு வெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்று ள்ளீர்கள். இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது.

இனவழிப்பு அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம் என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில், மேற்படி 2013 ஆம் ஆண்டு சட்டசபைத் தீர்மானத்தை ஒட்டிய ஓர் தீர்மானத்தை, இம் மே மாதத்தில் கூடும் தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்விலேயே தங்களது தலைமையில் நிறைவேற்றுவது ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அதன் மூலம், ஈழத் தமிழினம் மீது நீங்கள் காட்டும் அக்கறையானது, கொடிய இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்பதுடன் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் இதயங்களில் நீங்காத இடத்தை தங்களுக்கு வழங்கும் என்பதையும் தெரிவித்து, மீண்டும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post

“வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்” – சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்!

Next Post

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ

Next Post
ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் - மஹிந்த ராஜபக்ஷ

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures