Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத் முதலிடத்துக்கு முன்னேறியது

May 7, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை வீழ்த்திய ஹைதராபாத் முதலிடத்துக்கு முன்னேறியது

ஹைதராபாத் ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (06) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ஓட்டங்களால் வெற்றிகொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 49 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே அதிகபட்சமாக 7 வெற்றிகளை ஈட்டியுள்ளது.

இதற்கு அமைய 14 புள்ளிகளைப் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்தபோதிலும் பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கூப்பர் கொனலி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் குவித்த சதம் இறுதியில் பலனற்றுப் போனது.

பஞ்சாப் கிங்ஸ் முதல் 4 ஓவர்களுக்குள் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும் கூப்பர் கொனலி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 59 பந்துகளில் 7 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 107 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆனால் ஏனைய வீரர்களில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (28), சூரியான்ஸ் ஷெஜ் (25), மார்க்கோ ஜென்சன் (19) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவங் குமார் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்வரிசை வீரர்களின் சிறப்பான பங்களிப்புடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்தது.

அபிஷேக் ஷர்மா (35), ட்ரவிஸ் ஹெட் (38) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து 55 ஓட்டங்களைப் பெற்ற இஷான் கிஷானுடன் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹென்றிச் க்ளாசன், 4ஆவது விக்கெட்டில் மேலும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

ஹென்றிச் க்ளாசன் 69 ஓட்டங்களைப் பெற்றதுடன் நிட்டிஷ் குமார் ரெட்டி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.

Previous Post

தென்கொரியாவின் முதல் ‘ரோபோ துறவி’ – பௌத்த மதச் சடங்கில் புதிய புரட்சி!

Next Post

ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் ‘சிஸ்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் ‘சிஸ்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் 'சிஸ்டம்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures