Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

May 7, 2026
in News, Sri Lanka News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மீண்டும் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த விஜய்யிடம்.. ”113 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உங்களிடம் இருக்கிறது.  வேறு எந்த கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்” என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும்,  118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் புதிய அரசு ஏற்படுவதற்கான குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

இதனிடையே பதவி ஏற்பு விழாவிற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த புணரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் விஜய் வீட்டிற்கு செல்லும் வழியில் காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பு தடுப்புகளும் அகற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் விஜய் வீட்டில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் எனும் கருவியும் அகற்றப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் உடன்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவு கோரி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன்-  திமுக கூட்டணியின் தலைவரான மு க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் திமுகவின் மூத்த தலைவர்களான டி ஆர் பாலு- கனிமொழி- உதயநிதி ஸ்டாலின்- ஆகியோர் பங்கு பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழக மாநில செயலாளரான வீரபாண்டியன், ‘அதிக அளவில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை ஆளுநர் தர வேண்டும் என்றும், முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என்றும், அதன் பிறகு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  இதற்காக அவர் பல இந்திய மாநிலங்களில் இது போன்ற நெருக்கடியின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என்றும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் தனி இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சியை தவிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதரவை அறிவித்தவுடன் விஜய் முதல்வராக பதவியேற்க கூடும் என்பதால் இவர்களின் ஆதரவுக்காக தமிழக வெற்றிக்கழகம் காத்திருக்கிறது.

அதே தருணத்தில் ஆளுநரின் இந்த செயல்பாடு மற்றும் அணுகு முறையை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால்… ஆத்திரமடைந்திருக்கும் பாஜக- ஆளுநர் மூலமாக அவரை முதலமைச்சராக பதவி ஏற்க விடாமல் ‌ சட்டரீதியான இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

Previous Post

அவசரகால சட்ட அமுலாக்க காலத்தை  நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Next Post

தென்கொரியாவின் முதல் ‘ரோபோ துறவி’ – பௌத்த மதச் சடங்கில் புதிய புரட்சி!

Next Post
தென்கொரியாவின் முதல் ‘ரோபோ துறவி’ – பௌத்த மதச் சடங்கில் புதிய புரட்சி!

தென்கொரியாவின் முதல் 'ரோபோ துறவி' - பௌத்த மதச் சடங்கில் புதிய புரட்சி!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures