வரலாறு காணாத வெற்றிச் சாதனை நிகழ்த்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களுக்கு ஒரு அன்புச் சசோதரனாக ஒரு ஈழத் தமிழனாக என்னுடைய வாழ்த்தைப் பகிர்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரைத்துறையில் இருந்து வந்து நிகழ்த்திய சாதனையை கடந்து புதிய சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளதை வரலாறு பெருமையுடன் பார்க்கிறது.
கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாதாரணமானதல்ல. தமிழக மக்கள் உங்கள்மீது அளவற்ற அன்பையும் நம்பிக்கையையும் வைத்துள்ளார்கள் என்பதன் வெளிப்பாடு இந்த வெற்றி.
தமிழ்நாட்டில் புதிய சாதனையைப் படைக்க மனதார வாழ்த்துகிறேன். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் நீதிக்கும் உங்கள் குரலை ஒலிக்கச் செய்வீர்கள் என்பதில் எமக்குத் தீராத பெரு நம்பிக்கை.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
