Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டுமென வடக்கு கட்சிகள் விரும்புகின்றன | பிமல் ரத்நாயக்க

April 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று புதன்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2027 அக்டோபர் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையை இணைக்கும் வீதி பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

நெடுந்தீவில் 1,400 குடும்பங்கள் வாழ்கின்றன. சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இங்கு நிறைய இடம் உள்ளது. எனவே, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

போக்குவரத்து பிரச்சினைதான் இப்பகுதிக்கு பெரும் பிரச்சினையாகும். இதனால் பாடசாலையைக்கூட உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்கள்கூட 3 மணிக்கு மூடப்படுகின்றது.

நெடுந்தீவு இலங்கை படத்தில் இருந்தாலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு கிடைக்கவில்லை. போக்குவரத்து பிரச்சினையே நெடுந்தீவின் கழுத்தை நெறித்துள்ளது எனலாம்.

நெடுந்தீவுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வேறு குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை தீர்க்கலாம்.

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

அதேவேளை, கொழும்பு அரசுகள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தன. ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நெடுந்தீவு, பருத்தித்துறை மற்றும் நைனாதீவு போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாண அரசாங்கம் (உள்ளாட்சி மன்றங்கள்) கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

கப்பல் போக்குவரத்து, இறங்குதுறைமுகம் பிரச்சினைகள் உரியவகையில் தீர்க்கப்படும். நெடுந்தீவுக்கு இரு இ.போ.ச பஸ்கள் கோரப்பட்டிருந்தன. அதனையும் நாம் விரைவில் வழங்குவோம்.

அதேவேளை, எமது அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை. கொள்கை அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எனினும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன.

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.

Previous Post

21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும்

Next Post

ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தமிழ் பேசக்கூடிய வீரர்கள்

Next Post
ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தமிழ் பேசக்கூடிய வீரர்கள்

ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தமிழ் பேசக்கூடிய வீரர்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures