இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நூறு சாமி ‘ திரைப்படத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ் , கருணாஸ், சக்தி ,காவ்யா அனில் , பாலாஜி சக்திவேல், அருள் தாஸ் , முனிஸ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ் பகவதி பெருமாள் , வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பி. தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் விவசாயியின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.
இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
