கனிஷ்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பிரகாசித்துவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலியாவில் இம் மாதம் நடைபெறவுள்ள இரண்டு வகை கனிஷ்ட மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொட ர்களில் பங்குபற்றவுள்ளது.
Beaches & Islands
இத் தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் பங்குபற்றவுள்ளன.
இந்த மும்முனை தொடரில் 2 கனிஷ்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் 4 கனிஷ்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும்.
கனிஷ்ட மகளிர் 50 ஓவர் போட்டிகள்
ஏப்ரல் 7 – இலங்கை எதிர் இங்கிலாந்து (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)
ஏப்ரல் 8 – இலங்கை எதிர் அவுஸதிரேலியா (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)
கனிஷ்ட மகளிர் ரி20 போட்டிகள்
ஏப்ரல் 12 – இலங்கை எதிர் இங்கிலாந்து (பில் பிப்பென் ஓவல், கோல்ட் கோஸ்ட்)
ஏப்ரல் 13 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (பில் பிப்பென் ஓவல், கோல்ட் கோஸ்ட்)
ஏப்ரல் 17 – இலங்கை எதிர் இங்கிலாந்து (இயன் ஹீலி ஓவல், பிறிஸ்பேன்)
ஏப்ரல் 18 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா (இயன் ஹீலி ஓவல் – பிறிஸ்பேன்)
