Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது

March 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

 கனேடியர்கள் இருவரால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 25 வயதுடைய ஆண் ஒருவரும் 29 வயதுடைய பெண் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பொருள்

இவர்கள் இன்று (10) காலை தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது | Two Canadians Arrested In Katunayake

இலங்கை சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32.159 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 321,590,000 (32 கோடி) ரூபா என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால்  விசாரணை

சந்தேநபர்கள் இருவரும் சுங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சுங்கப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது | Two Canadians Arrested In Katunayake

மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

Previous Post

‘தலைவாசல்’ விஜய் நடிக்கும் ‘ஆர் ஆர் ரிசார்ட்’ இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures