ஒரு இனத்தின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்ற நாம் தேசியவாதிகள். தமிழ் தேசியவாதிகள். நாம் நியாயமான வழியில் அறத்தின் வழியில் பயணிப்பவர்கள். எமது தலைமை காட்டிய வழி சரியான வழி.
ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி, கொல்லப்பட்டதும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பெரும் கவலை அடைந்துள்ளார். இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க உதவிய ஈரான் தமக்கு நட்பு நாடு என்று நாமல் ராஜபக்ச கூறுகிறார். ஆக ஈரானின் பக்கம் ராஜபக்ச குடும்பம் நிற்கிறது என்றால் எம்மை அழிக்க உதவியமையே அடிப்படை.
இவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. மகிந்த இனவாதி. அயதுல்லா அலி கமேனி, மதவாதி. அதனால் அவர் கொல்லப்பட்டிருக்கையில் ராஜபக்சவுக்கு பெரும் கவலை ஏற்படுவது இயல்புதான்.
ஆனால் நாம் நியாயமான வழியில் பயணிக்கும் தமிழ் தேசியவாதிகள்.
இலங்கை அரசு ஈழ மண்ணில் இனப்படுகொலைப் போரை நடாத்தி ஒன்றரை லட்சம் மக்களை கொன்றுவிட்டு இப்போது ஈரான் போருக்கு வருத்தம் தெரிவிப்பது எல்லாம் எப்படி நியாயமான செயலாக இருக்கும்.
எங்கள் தலைவன் அறத்தோனாய், உயர்ந்து நிற்க, மகிந்த போன்றவர்கள் அழுந்தி வாழ்வதுதான், மகிந்த அடைந்த தோல்வி.காலத்தின் தீர்ப்பில் இருந்து எவரும் தப்ப முடியாது என்பதை நினைவுபடுத்துகிறோம்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை

