கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான யாஷ் நடிப்பில் தயாராகி எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’ திரைப்படம் – மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி என்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரான விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி என்று வெளியாகும் என அறிவித்தது.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் உருவான யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படமும் தற்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எதிர்வரும் ஜூன் நான்காம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விஜய் – யாஷ் என பான் இந்திய நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திட்டமிட்ட திகதியில் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் திரையுலக வணிகர்கள் தங்களுடைய வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.

