Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கச்சதீவில் இலங்கை கடற்படையினருடனான தமிழக இளைஞர்களின் முரண்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

March 4, 2026
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
கச்சதீவில் இலங்கை கடற்படையினருடனான தமிழக இளைஞர்களின் முரண்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் என்றும், இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடற்படை மற்றும் காவல்துறையினர்

“நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போது அங்கிருந்த கடற்படை மற்றும் காவல்துறையினர் வரம்பு மீறி செய்யப்பட்டனர். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்.

கச்சதீவில் இலங்கை கடற்படையினருடனான தமிழக இளைஞர்களின் முரண்பாடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Conflict With The Srilankan Navy In Katchatheevu

இதன் போது எனக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை கூட ஏற்பட்டது. இதன்போது இந்திய தூதரகத்துடன் நான் பேச முயற்சித்தாலும் பின்னர் அங்கிருந்த சூழ்நிலையுயும், ஏனையோரது நிலையையும் கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

திரும்பி வரும்போதும் அதே மாதிரியான சூழ்நிலையே ஏற்பட்டது. அங்கிருந்த சிறு வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நிலையை கடைப்பிடித்தார்.

பலர் மயக்கமுறுகின்றார்கள், மூச்சு திணறல் ஏற்படுகின்றது எனவே மக்களை சிறிது நேரம் கடற்கரையில் பரவலாக அமர்ந்திருப்பதற்கு அனுமதிக்குமாறு இளைஞர்கள் கடற்படையிடம் கோரியவேளை இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது சிறிய கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களை தாக்கினார். பின்னர் இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அங்கு வந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் நிலைமையை சமாளித்து மக்களை கடற்கரையில் உட்கார அனுமதித்தார்” என்றார்.

Previous Post

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘ பெத்தி ‘ படத்தின் அப்டேட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures