மகளிர் மட்டும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உடன்பிறப்பே’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை நிவேதிதா சதீஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஓ பட்டர்ஃபிளை’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ பட்டர்ஃபிளை ‘எனும் திரைப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேதா ராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோம்நாத் இசையமைத்திருக்கிறார் . ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ட் ஹில் சினிமா மற்றும் பலாம்புர் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
