கண்டி – பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மஹியங்கனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அதேதிசையில் பயணித்த பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்திசையில் வந்த பஸ்ஸின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய நெதர்லாந்து நாட்டவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

