Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

February 14, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி மற்றும் பலர்.

இயக்கம் : அஜயன் பாலா

மதிப்பீடு : 2 /  5

இசைஞானி இளையராஜா – ஒளிப்பதிவாளர் செழியன் – எழுத்தாளர் அஜயன் பாலா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘மைலாஞ்சி’ – ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா ? என்பதை தொடர்ந்து காண்போம்.

வன விலங்குகளையும், பறவைகளையும் பிரத்யேகமாக கமெராவில் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞரான சூர்யா- சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இவர் ஒப்பந்த அடிப்படையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அபூர்வமாக காட்சியளிக்கும் லாஃபிங் த்ரஷ் எனும் பிரத்யேக பறவையை புகைப்படம் எடுப்பதற்காக சென்னையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார்.

ஊட்டியில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்த சாரல் அண்டனி ஜோன்சன் எனும் பெற்றோரை இழந்து சித்தியின் பராமரிப்பில் வளரும் இளம்பெண்ணை சந்திக்கிறார்.

சந்தித்த உடன் அந்தப் பெண் மீது காதல் கொள்கிறார். பின்னர் சூர்யாவும் , சாரலும் காதலில் வெற்றி பெற்று திருமண பந்தத்தில் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

எந்த அழுத்தமான திருப்பங்களும் இல்லாமல் இயல்பான பெண் நாவலாசிரியை ஒருவரின் நாவலை போல் திரைக்கதை பயணிக்கிறது. இதில் ஒளிப்பதிவு, பின்னணி இசை மட்டும் ரசிகர்களின் கண்களையும், காதுகளையும் ஆக்கிரமிக்கிறது.

சூர்யாவாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதுடன் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த சில தருணங்களையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

இக்கதையின் மையப்புள்ளியான சாரல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷா குரூப்-  முகத்தில் இளமையைத் தொலைந்திருந்தாலும் ஒளிப்பதிவாளரின் நுட்பமான திறனால் திரையில் அழகாக தோன்றி ரசிகர்களை வசீகரிக்கிறார்.

திரைக்கதையின் சுவராசியத்திற்காக பாவிக்கப்பட்டிருக்கும் கதிர் எனும் கதாபாத்திரம் – தமிழ் சினிமாவின் காதல் கதைகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ ரகம். இருந்தாலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் திரையில் தோன்றி தன் அனுபவம் மிக்க நடிப்பால் ஆறுதல் அளிக்கிறார்.

சிங்கம் புலி – முனிஸ்காந்த் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து  தோல்வியை சந்திக்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திலும் திரைக்கதையை கடந்து ஒளிப்பதிவோ… பாடல்களோ.. பின்னணி இசையோ.. துருத்திக் கொண்டு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால்  இந்த படத்தில் இவை இரண்டு மட்டும் தான் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

புகைப்பட கலை குறித்து அத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரின் உரையாடல்-  இயக்குநர் அஜயன் பாலாவின் தொடர் புத்தக வாசிப்பிற்கான அடையாளம்.

மைலாஞ்சி – ஆள் அரவமற்ற அருவி

Previous Post

2026 உலக விமான சேவை கிரிக்கெட் தொடரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அணி அபார வெற்றி!

Next Post

ஆசிரியர் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

Next Post
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

July 12, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures