உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 டொலர்களாக குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக 5500 டொலர்களை எட்டிய தங்கத்தின் விலை இன்று திடீரென 4,893.2 டொலர்களாக குறைவடைந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் 22 கரட் (1 பவுண்) தங்கம் 349,600 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

