காலம் சென்ற அமரர் கலாசூரி திருமதி. லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
‘இலங்கையின் இசைக்குயில்’ எனப் புகழ்பெற்ற அமரர் கலாசூரி திருமதி. லதா வல்பொல சிங்கள திரைப்படத் துறைக்கும், சிங்கள இசைத் துறைக்கும் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு, அவருடைய இறுதிக்கிரியை இன்று புதன்கிழமை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படவுள்ளது.
இதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

