நடன இயக்குநரும், பிரபல நடிகருமான றொபட் மாஸ்ரர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘செவல காள’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருப்பதுடன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் பால் சதீஷ் இயக்கத்தில் உருவாகும் ‘செவல காள ‘ எனும் திரைப்படத்தில் றொபட் மாஸ்ரர், மீனாட்சி ஜெய்ஸ்வால், ஆரியன், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் ஆர். ராஜா மணி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ப்ருத்வி இசையமைக்கிறார். ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை விங்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தன் சகோதரனுக்காக அதிகார மற்றும் பண பலத்தை எதிர்க்கும் நாயகனின் சாகசத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது.

