Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

December 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு  நடைமுறையாககின்றது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (08) அகில  இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள்,  உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை  உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை  முன்வைத்தனர்.

வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.

பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் 

தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட  கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியானது, 4 ஈ.பி.டி.பி  உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர்  தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன்  சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட  கட்சியின் ஓர் ஆசனம்,  தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.

இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பியின் 04 வாக்குகளும், என்.பி.பியின் 03 வாக்குகளும், தமிழரசு கட்சியின் ஒரு வாக்கும் பதியப்பட்டன.

உள்ளூராட்சி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பெண் விமானியின் குற்றச்சாட்டு | DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

Next Post

சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47 ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Next Post
சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47 ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சூர்யா நடிக்கும் 'சூர்யா 47 ' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures