Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

November 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு 26 இம் திகதி முதல் 30 வரை முன்பள்ளி பாாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகங்களின் முன்பள்ளி செயற்றிட்ட உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

நாட்டில் சில பாடசாலைகளுக்கு சீரற்ற காலநிலை காரணமாக காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை | Announcement School Holiday In Srilanka

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிவித்தலை ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ளது.  

வானிலை மற்றும் காற்று நிலைமை 

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை | Announcement School Holiday In Srilanka

இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் (நவம்பர் 25 – 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures