சிவகார்த்திகேயன்- ரவி மோகன் -அதர்வா – ஸ்ரீ லீலா – சுதா கொங்கரா – கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரத்னமாலா..’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக தேசிய விருதினை வென்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டுகளில் இந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்பட்டதன் பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அடி அலையே’ எனும் முதல் பாடல் வெளியாகி 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்த நிலையில்… தற்போது இப்படத்தில் இடம்பெற்ற’ ரத்னமாலா ரத்னமாலா ‘எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் ஜெய ஸ்ரீ மதிமாறன் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

