Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய ஆசிய 18 வயதுக்குட்பட்ட பெண்கள் கரப்பதாட்டம்: கிர்கிஸ்தானை அதிரவைத்த இலங்கை 3 நேர் செட்களில் வெற்றி

November 7, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association – CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை அதிரவைத்து 3 நேர் செட்களில் இலங்கை அபார வெற்றியீட்டியது.

முழுப் போட்டியிலும் மிகத் திறமையான வியூகங்களுடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் முதல் தடவையாக இந்த சுற்றுப் போட்டியில் ஆக்ரோஷத்துடனும் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் விளையாடினர்.

முதலாவது செட்டில் 25 – 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் இலங்கை வீராங்கனைகளின் முகங்களில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் காண முடிந்தது.

இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதிக்ககொண்டவண்ணம் இருந்தன. இறுதியில் சமநிலை முறிப்பு முறையில் 27 – 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

மூன்றாவது செட்டின் கடைசிக் கட்டத்தில் புத்திசாதுரியத்துடன் விளையாடி இலங்கை 25 – 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று போட்டியை 3 – 0 என்ற நேர் செட்களில் கைப்பற்றியது.

Previous Post

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயம்

Next Post

அதர்ஸ் – திரைப்பட விமர்சனம்

Next Post
அதர்ஸ் – திரைப்பட விமர்சனம்

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures