மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும்,
மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

