Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில் ஸாஹிரா, கேட்வே, றோயல், ஹமீத் அல் ஹுசெய்னி

November 6, 2025
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில் ஸாஹிரா, கேட்வே, றோயல், ஹமீத் அல் ஹுசெய்னி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஸாஹிரா, கேட்வே,  றோயல், ஹமீத் அல்  ஹுசெய்னி  ஆகிய அணிகள் கால் இறுதிகளில் வெற்றிபெற்று அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

சிட்டி லீக் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியை 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸாஹிரா கல்லூரி வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் மிகத் திறமையாக ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடியன.

முதலாவது பகுதியின்  30ஆவது நிமிடத்தில் எப்.ஆர்.எவ். அஹமத் கோல் போட்டு ஸாஹிராவை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் 57ஆவது நிமிடத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி வீரர் ஏ. குறியாளன் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

சுமார் 20 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் அவர் கோல் போட்டார்.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பின்கள வீரர் எஸ். மாதுளன் தனது கோல் வாயிலில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இல்கானதுடன் ஸாஹிராவுக்கு பெனல்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

பெனல்டியை எம். எச்.   அப்துல்லா   கோலாக்கியதுடன் ஸாஹிராவின் ஆதிக்கம் வலுவடைந்தது.

பெறுமதிவாய்ந்த வீரர்: எம். கதீம்

அதன் பின்னர் எம்.  எச். அப்துல்லா (82 நி.), எம்.கே.எம். ஹிப்னி (85 நி., 90 + 2 நி.) ஆகியோர் மேலும் 3 கொல்களைப் போட்டனர்.

இறுதியில் ஸாஹிரா 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கேட்வே கல்லூரி கடைசிக் கட்டத்தில் போட்ட கோலின் மூலம் வெற்றிபெற்றது.

பெறுமதிவாய்ந்த வீரர்: நடால் சேனபால (கேட்வே)

கேட்வே சார்பாக 89ஆவது நிமிடத்தில் ஏய்டன் பெரேரா

இதனைத் தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் றோயல் கல்லூரியும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியும் பெனல்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

புனித சூசையப்பர் கல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது கால் இறுதிப் போட்டி கோல்களின்றி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

பெறுமதிவாய்ந்த வீரர்: அஸ்மான் கான் ( றோயல்)

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் றோயல் கல்லூரி 5 – 4 என வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரிக்கும் தாருஸ்ஸலாம் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளாலும் கோல் போடும் வாய்ப்புகள் தவறவிடப்பட இறதியில் போட்டி வெற்றிதோல்வின்றி முடிவடைந்தது.

பெறுமதிவாய்ந்த வீரர்: எம். சய்த் (ஹமீத் அல் ஹுசெய்னி)

இதனைத் தொடர்ந்து அரை இருட்டில் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 – 0 என ஹமீத் அல் ஹுசெய்னி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டி முடிவுகளை அடுத்து அரை இறுதிப் போட்டிகள் கொம்பனித் தெரு சிட்டி லீக் திடலில் நாளை பிற்பகல் நடைபெறவள்ளது.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஸாஹிரா – கேட்வே அணிகளும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் றோயல் – ஹமீத் அல் ஹுசெய்னி அணிகளும் மோதவுள்ளன.

Previous Post

விடுதியில் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

Next Post

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத் தொடக்க விழா

Next Post
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத் தொடக்க விழா

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன் கொலை வழக்கு' படத் தொடக்க விழா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures