யூட்யூப் பிரபலமான ரி ரி எஃப் வாசன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘இந்தியன் பீனல் லா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அப்போ இப்போ ‘ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘இந்தியன் பீனல் லா ‘ எனும் திரைப்படத்தில் கிஷோர், ரி ரி எஃப் வாசன் , அபிராமி, குஷிதா, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கலகலப்பான என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராதா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘காலையில் எழுந்தவுடன்..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ‘கானா’ ருத்ரா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி பாடியிருக்கிறார்.
வடசென்னை மக்களின் பாரம்பரிய இசை வடிவமாக கருதப்படும் கானா பின்னணியில் அந்த காலத்து பெண்களும் இந்த காலத்து பெண்களும் தொடர்பான ஒப்பீடுகள் பாடல் வரியாக இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

