கம்பஹாவில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கைவிலங்குகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
குருவலான பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
இவர் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணைக்காக அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

