Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

October 25, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

சர்ச்சைக்குரிய மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறிய குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பிரதி அமைச்சர் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்துக்களால் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சாணக்கியனின் கூற்று 

“பொது அதிகாரிகளாக, முதலீட்டாளர்கள் மற்றும் சாத்தியமான முதலீடுகளில் ஆர்வமுள்ள தனிநபர்களை நாங்கள் தினமும் சந்திப்போம்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறிய கலந்துரையாடல் ஒருபோதும் நடக்கவில்லை, எனக்கு அப்படி ஒரு கடிதம் ஒருபோதும் கிடைக்கவில்லை.

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர் | Deputy Minister Rejected Allegation By Shanakiyan

யூடியூப்பில் தோன்றும் விடயங்களை பிரபலப்படுத்த நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் அதன்போது குறிப்பிட்டள்ளார்.

அத்தோடு, ஒப்பந்தம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே தான் அரசியலில் நுழைந்ததாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கூற்றுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பிரதி அமைச்சரின் கருத்துக்கள் தனிப்பட்ட அறிக்கையா அல்லது சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டிய விஷயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதி அமைச்சரின் தனிப்பட்ட அறிக்கை

இதேவேளை, குறித்த விடயத்தை விசாரிக்கவும், சிசிரிவி காட்சிகளை ஆராயவும், தொடர்புடைய கடிதத்தை மறுபரிசீலனை செய்யவும் நான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர் | Deputy Minister Rejected Allegation By Shanakiyan

மேலும், பிரதி அமைச்சர் தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பொறுப்புக்கூறலைத் தவிர்க்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் பிரதி அமைச்சர் அபேசிங்கேவும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திகவும் கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்து சர்ச்சைக்குரிய மதுபான உற்பத்தி உரிமம் குறித்து கலந்துரையாடியதாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

‘தடை அதை உடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

சர்வதேச விசாரணைகளை எதிர்க்கும் அரசு : காரணத்தை அம்பலப்படுத்திய பிரதமர்

Next Post
இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

சர்வதேச விசாரணைகளை எதிர்க்கும் அரசு : காரணத்தை அம்பலப்படுத்திய பிரதமர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures