திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துரையாடினர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் திடீர் கள விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் காணி அபகரிப்பு தொடர்பிலும் விவசாயிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.
இதில் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



