Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

September 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள்  மூடைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள்,  சுக்கு,  பீடி இலை பண்டல்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

 இதனை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பகுதிகளில் மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் மூட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில்  மரைன் ஏடிஜிபி சஞ்சீவ் குமார் உத்தரவின் பேரில் மண்டபம் மரைன்  காவல் நிலைய ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையிலான மரைன் போலீசார் வேதாளை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பூட்டி இருந்த வீட்டில் இருந்து சமையல் மஞ்சள் வாசனை அதிக அளவு வந்ததால் வீட்டை உடைத்து சோதனை செய்தபோது வீட்டில் 40 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 1,600 கிலோ எடையுள்ள சமையல் மஞ்சள் மூட்டைகள் இலங்கை கடத்துவதற்காக பதுக்கி இருந்தது தெரியவந்ததையடுத்து கைப்பற்றல் செய்த மரைன் பொலிஸார் வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் இந்திய மதிப்பு 2 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும், வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருவதுடன், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன் பொலிஸார்  எச்சரித்துள்ளனர்.

Previous Post

போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை | பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு செல்வம் கண்டனம்

Next Post

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் காலமானார்

Next Post
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் காலமானார்

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் காலமானார்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures