பிரபல சிங்கள பாடகர் தமித் அசங்க வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு தொடர்பில் வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலன் அடிப்படையில் தமித் அசங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பிரபல சிங்கள பாடகர் தமித் அசங்க வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஒரு இலட்சம் ரூபாபெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.