‘நடனப்புயல்’ பிரபுதேவா- ‘வைகைப்புயல்’ வடிவேலு ஆகிய இருவரும் இருபது ஆண்டுகளுக்கு பிறகு பெயரிடப்படாத புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா இப்படத்தின் தொடக்க விழா டுபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தருணத்தில் தயாரிப்பாளர்கள் ‘லைகா’ சுபாஷ்கரன்- ஞானவேல் ராஜா -நடிகர் ஜீவா – இயக்குநர் நிதிஷ் சகாதேவ் – ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா- வடிவேலு முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகர் பப்லு பிருதிவிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
எக்சன் அட்வெஞ்சராக தயாராகும் இந்த திரைப்படத்தை கே ஆர் ஜி கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும், ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும், படத்தில் பங்குபற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபுதேவா -வடிவேலு- யுவன் சங்கர் ராஜா- கே ஆர் ஜி கண்ணன் ரவி- சாம் ரோட்ரிகஸ் ஆகியோர் புதிதாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.