திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான குழுவொன்று இன்று (27) கள விஜயம் மேற்கொண்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளருடன் கள நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த குள புனரமைப்பு அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. இக்குளத்தின் மூலம் விவசாயிகள், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் என பலரும் நன்மை அடைகின்றனர்.
இந்த நடவடிக்கையின்போது விவசாய சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களும் இணைந்திருந்தனர்.

