Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பிற்கு மீண்டும் வருகை தந்துள்ள  “ டல்ஸா ”

August 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொழும்பிற்கு மீண்டும் வருகை தந்துள்ள  “ டல்ஸா ”

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டல்ஸா (LCS 16) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வேகம் மற்றும் பல்வேறு திறன்களுக்காக கட்டமைக்கப்பட்ட HSS டல்ஸா, ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் இயங்கக் கூடியது. இது அமெரிக்காவின் அதிநவீன கடல்சார் திறனை பிரதிபலிக்கிறது. இறுதியாக 2021ஆம் ஆண்டு இலங்கை கடற்படையுடன் இணைந்து இடம்பெற்ற Cooperation Afloat Readiness and Training (CARAT) பயிற்சிகளின் போது இக்கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்தது. இம்முறை, யுஎஸ்எஸ் டல்ஸா இந்தோ பசிபிக்கில் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்பு செயற்படும்.

யுஎஸ்எஸ் டல்ஸா கப்பலுக்கும், அதன் குழுவினருக்கும் இலங்கை வழங்கிய அன்பான வரவேற்பினை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. அது எமது பங்காண்மையின் வலிமையினையும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக், பாதுகாப்பான கடற் பாதைகள் மற்றும் பிராந்திய செழிப்பிற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் ஒரு சைகையாகும்.

யுஎஸ்எஸ் டல்ஸா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.

கப்பலின் அடிப்பகுதியில்  கப்பலைத்தாங்கும் ஒன்றுக்கொன்று சமாந்திரமான மூன்று தெப்பங்கள் போன்ற அமைப்பினைக் (trimaran hull) கொண்டுள்ள LCS 16 ஆனது அதி உச்ச வேகமாக 40நொட்ஸ் வேகத்தை விட அதிக வேகத்தை எட்டும் திறனுடையதாகும். யுஎஸ்எஸ் டல்ஸா, சிறிய தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் வாகனங்களுடன் கூடிய தாக்குதல் படைகளை காவிச்செல்லும் திறனைக் கொண்டுள்ளமையானது, பல்வேறு நடவடிக்கைத் தேவைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைப்பதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்ட ஒரு வெல்லமுடியாத சக்தியாக அதை மாற்றுகிறது. அமெரிக்காவின ஓக்லஹோமா மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரத்தின் பெயர் சூட்டப்பட்ட யுஎஸ்எஸ் டல்ஸா, 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் வைத்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

‘கடினமான, இயலுமையுள்ள, தயார்’ என்ற குறிக்கோள் வாசகத்தினால் வழிநடத்தப்படும் யுஎஸ்எஸ் டல்ஸா, ஒரு 57மிமி கடற்படைத் துப்பாக்கி, ஏவுகணைகளை ஏவும் கருவிகள் மற்றும் பல்வேறு தாக்குதல் திறன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதன் மூலமும், கடல்சார் பாதுகாப்பிற்கு உதவி செய்வதன் மூலமும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினைப் பாதுகாப்பானதாகவும், ஸ்திரமானதாகவும் வைத்திருப்பதற்கு உதவி செய்வதற்காக யுஎஸ்எஸ் டல்ஸா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொள்கிறது.

Previous Post

ரணில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

Next Post
முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குளம் புனரமைக்கப்படுவது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures