Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 13 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

August 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 13 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாகவும் வெள்ளிக்கிழமை (15) மன்னார் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாரும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாகவே கடந்த வாரம் போராட்டம் இடம்பெற்ற நிலையில் ஒரு வாரகாலம் காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்த நிலையில், அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நள்ளிரவு நேரங்களில் காற்றாலை செயற்திட்டங்களுக்கான உதிரிபாகங்கள் மன்னார் நகருக்குள் மக்களின் எதிர்ப்பை மீறியும் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பின்னனியிலேயே ஜானதிபதியின் வாக்குறுதியிலும் நம்பிக்கை அற்ற தன்மையே காணப்படுவதன் அடிப்படையில் மக்கள் தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் என அனைத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக காற்றாலை செயற்திட்டத்துக்கு அனுமதி எமது அரசாங்கத்தால் வழங்கப்படாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இந்த ஒரு மாத வாக்குறுதியை மாத்திரம் எவ்வாறு நம்புவது என பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

Next Post

அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

Next Post
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures