யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (04) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முகநூலில் பதிவிட்ட கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.