ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் (LAUGFS Gas PLC) அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (01.08.2025) லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4இ100 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645 ரூபாய்க்கும், 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
