Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்! நீதியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி

August 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் (Harshana Nanayakkara) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள நீதி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (30) இந்த சந்திப்பு நடைபெற்ற போது அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்களை  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக நீதி அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக தாங்கள் எதிர்கொண்ட உளவியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கை 

தங்களின் அன்புக்குரியவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் இன முரண்பாடுகளால் உருவான போரின் விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது அவசியமாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்! நீதியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி | Tamil Political Prisoners Release Meet Justice Min

கடந்த காலத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள், ஜே.வி.பி.க்கு பொது மன்னிப்பு, மற்றும் போருக்கு பின்னர் 12,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையினை மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு 

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கோரிக்கைகளை, தான் “காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்கிறேன்” என்று குறிப்பிட்டு, சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்! நீதியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி | Tamil Political Prisoners Release Meet Justice Min

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றமையால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பானது கடந்த ஜனவரி 2025 முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான எழுத்துமூல கோரிக்கு அமைவாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரபாகரனின் உருவச்சிலை! அநுர அரசாங்கத்துக்கு சவால் விடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Next Post

நபர் ஒருவரின் உயிருக்கு எமனாக மாறிய மீன் பனிஸ்

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

நபர் ஒருவரின் உயிருக்கு எமனாக மாறிய மீன் பனிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures