யாழில் இரு வாள்வெட்டுக்குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது யாழ்.முளாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இன்றும் தொடர்ந்த நிலையில் அதை கட்டுப்படுத்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதன்போது குறித்த குழுவில் சிலர் கற்களை கொண்டு பொலிஸாரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.