நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்’ சீதா பயணம் ‘படத்தில் இடம்பெற்ற ‘எந்தூரு போறடி புள்ள..’ என்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான ‘எக்சன் கிங்’ அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா பயணம்’ எனும் படத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், பிரகாஷ் ராஜ், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் அர்ஜுன் மற்றும் துருவா சர்ஜா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ ராம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தூரு போறடி புள்ள ‘எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சுரேஷ் ஜித்தன் எழுத, இசையமைப்பாளர் ,பின்னணி பாடகர் ஜெஸ்ஸி கிஃப்ட் மற்றும் பின்னணி பாடகி ஸ்ருதி சிவதாஸ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். உற்சாகமூட்டும் துள்ளல் இசை பாணியில் உருவான இந்த பாடலும், பாடலுக்கான நடனமும், பாடலுக்கான சூழலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.