Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீடு

July 9, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர் தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீடு

‘ஒரு நொடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தமன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தில் தமன் அக்சான் , மால்வி மல்கோத்ரா, மைத்ரேயா, சிவம் , அருண் கார்த்திக், காளி வெங்கட், முனீஸ் காந்த், வேல. ராமமூர்த்தி, ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் திரில்லரான இந்த திரைப்படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கேபிள் சங்கர் , ஈரோடு மகேஷ் , ஜோதிடர் பரணி பால்ராஜ்,  இயக்குநர்கள் மீரா கதிரவன் – லோகேஷ்- அறிவழகன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் நடிகர் தமன் பேசுகையில், ” கிளாசிக்கான ஹாரர் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உலக அளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘ஓமன்’, ‘போல்டர்ஜிஸ்ட்’ என பல புகழ்பெற்ற ஆங்கில ஹாரர் திரைப்படங்கள் பிடிக்கும். அந்த வகையில் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் ஹொலிவுட்டில் வெளியான ‘ஓமன் ‘ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக இருக்கும்.

‘ஒரு நொடி’ படத்தின் உச்சகட்ட காட்சி எப்படி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்ததோ… அதேபோல் இந்த ஜென்ம நட்சத்திரம் படத்தின் உச்சகட்ட காட்சியும் பரபரப்பாக அமைந்திருக்கிறது.  படம் வெளியான பிறகு இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். ‘ஒரு நொடி’ படத்தை விட இந்தத் திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் ”என்றார்.

Previous Post

 பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Next Post

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

Next Post
பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures