2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 1,274 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த 1,274 வீதி விபத்துக்களில் 1,351 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் ஆண்டில் நாட்டில் 1,166 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 1,222 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.