Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சனிக்கிழமையில் உள்ளன்போடு வழிபட்டால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்…

July 6, 2025
in News, ஆன்மீகம், முக்கிய செய்திகள்
0
சனிக்கிழமையில் உள்ளன்போடு வழிபட்டால் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்…

உலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். வேண்டிய வரம் கிடைக்க வேங்கடவன் பெருமாளை சனிக்கிழமையில் வணங்கினாலே போதும் எல்லா வரங்களும் உங்களைத் தேடி வரும். அத்தகைய பெருமாளை சனிக்கிழமை அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சனிக்கிழமைதோறும் காலை, மாலை என இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி ஒரு சிறிய கிண்ணத்தில் அவல் வைத்து உள்ளன்போடு பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். கொஞ்சம் துளசி கிடைத்தால் பெருமாளின் திருப்பாதங்களில் தூவுங்கள். உள்ளம் உருகி, இரு கைகளையும் கூப்பி ஓம் நாராயணா என்று உண்மையான பக்தியோடு அவரிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வழிபடுங்கள்.

வாராவாரம் சனிக்கிழமை இந்த வழிபாட்டை உள்ளன்போடு செய்து பாருங்கள்… உங்கள் வாழ்வில் பெருமாள் ஏற்படுத்தும் அதிசயங்களை உங்களால் நிச்சயம் கண்கூடாக பார்க்க முடியும்.

உங்களால் இயன்ற அளவிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். முக்கியமாக ஏகாதசி வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒன்று வளர்பிறை ஏகாதசி, மற்றொன்று தேய்பிறை ஏகாதசி. இந்த இரண்டு ஏகாதசியிலும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக உங்களால் முடிந்தால் ஏகாதசியில் விரதம் தொடங்கி அடுத்த நாள் துவாதசியில் விரதம் முடித்து பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பருக எல்லா வரங்களையும், வளங்களையும் பெருமாள் உங்களுக்கு வழங்குவார்.

முடிந்தால் ஏகாதசி நாளில், பெருமாளுக்கு தயிர்சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வழிபாட்டின்போது விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நீங்கள் இழந்த செல்வங்களை அந்த வேங்கடவன் பெருமாள் உங்களுக்குத் தந்தருள்வார் என்பது ஐதீகம்.

Previous Post

பிரபலமான இயக்குநர்கள் வெளியிட்ட ‘ டபுள் கேம்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post

பூதாகரமாகும் செம்மணி விவகாரம் – ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

Next Post
சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதியுங்கள் -பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

பூதாகரமாகும் செம்மணி விவகாரம் - ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures