Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

June 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ், தம்மைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில (Udaya Gammanpila) குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் தாம் கருத்துக்களைத் தெரிவித்ததாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சில தரப்பினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விடயத்தில் மோசடி இடம்பெறவில்லை எனத் தெரிவிப்பதற்கு, இந்த அரசாங்கம் தங்களுக்கும், ஜனாதிபதிக்கும் நெருக்கமானவர்களை உபயோகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜனாதிபதியுடன் ஆலோசனை 

அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வது குறித்து, ஜனாதிபதியுடன் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசித்துள்ளனர் என தெரிவித்தார்.

அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில | Ex Minister Udayagammanpila To Be Arrested Soon

இனவாதத்தைத் தூண்டியதாக இந்த சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்தால், நீண்டகாலம் தடுத்து வைக்கலாம் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்று, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான நெடியவனை சந்திக்கவுள்ளதாகத் தாம் தெரிவித்த கருத்தினூடாக இனவாதம் தூண்டப்படுவதாக சில தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினார்.

எனினும், இது, தாமாகத் தெரிவித்த கருத்து அல்லவெனவும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களையே தாம் தெரிவித்ததாகவும், அதற்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

Next Post

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

Next Post
வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures