Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

அரசியல் கட்சியில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்வாறான மாறுப்பட்ட தீர்மானங்களால் மாவை .சேனாதிராசா பாதிக்கப்பட்டிருக்கலாம். கட்சியின் தீர்மானத்துக்கு துணை சென்றதாக அவரும் அடிபட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். என்னை பொறுத்தவரையில் அவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்ற  அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

2001 ஆம் ஆண்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமரர் மாவை. சேனாதிராசாவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழர்களின் அரசியல் உரிமை மற்றும் விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தார்.

மாவை. சேனாதிராசா தன்னை ஒரு பற்றாளராக அடையாளப்படுத்திக் கொண்டு  தமிழர்களின் விடுதலை அரசியலுக்கான தன்னை அர்ப்பணித்தார். 

2001 முதல் 2008 ஆம் ஆண்டு  வரையான காலப்பகுதியில் நாங்கள் கொள்கை ரீதியில் முரண்பட்டுக் கொண்டதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தியதாக அவரது அரசியல் செயற்பாடுகள் காணப்பட்டன.

அரசியல் கட்சியில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்வாறான மாறுப்பட்ட தீர்மானங்களால் மாவை .சேனாதிராசா பாதிக்கப்பட்டிருக்கலாம்.

 கட்சியின் தீர்மானத்துக்கு துணை சென்றதாக அவரும் அடிபட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். என்னை பொறுத்தவரையில் அவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

தமிழ் தேசியம் என்ற நிலைப்பாடு மற்றும் விடுதலை ஆகியவற்றை எந்நிலையிலும் மையப்படுத்தி செயற்பட்டார். எந்நிலையிலும் அவர் இந்த அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக செயற்படவில்லை. இவரது இழப்பை இலங்கை தமிழரசுக் கட்சியால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.

இந்த நாட்டின் அ ரச நிர்வாகத்தால் மாவை. சேனாதிராசா பாதிக்கப்பட்ட நிலையிலும் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒருபோதும் வெறுக்கவில்லை.

தமிழ்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே இவரது இழப்பு கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரிழப்பாகும்.

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது, உரிமைகள் அனைவருக்கும் உண்டு என்ற சிந்தனையில் இருந்துக் கொண்டு செயற்பட்டார்.  இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார்.

Previous Post

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து ; மூவர் வைத்தியசாலையில்

Next Post

மெட்ராஸ் மேட்னி | திரைவிமர்சனம்

Next Post
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

மெட்ராஸ் மேட்னி | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures