Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

 ‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி

June 3, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்குக | JVP

ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள்  முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில்  உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது   என்று  கைத்தொழில்  அபிவிருத்தி அமைச்சர்  சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  27/2 இன் கீழ் கடந்த அமர்வின் போது  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் நாமம் ( பெயர்) ரஜ உப்பு  என்று குறிப்பிடப்படுகிறது. முழு  சந்தை கட்டமைப்பையும் கைப்பற்றுவதற்காகவே இந்த பெயர் நாமம் பயன்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு  பிரதிநிதிகளின்  வலியுறுத்தலுக்கு அமைய  ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘  ஆனையிறவு உப்பு’ என்று  குறிப்பிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் குறுகிய அரசியல்  நோக்கங்களுக்காக ஒரு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளார்கள். உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு  அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள் வழங்கப்படவில்லை. முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே  நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே அரசியல் தலையீடு உள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள்  முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.. தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Previous Post

தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் | ரோஹன பண்டார

Next Post

ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு

ரெபல் ஸ்டார் ' பிரபாஸ் நடிக்கும் ' தி ராஜா சாப்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures