Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

May 31, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி

புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு அடகு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களிடம் உள்ளதாக அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். சுந்தராம்பாள் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (31.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.

மாகாணசபை சட்டம்

மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி | Bank Of Tamil Eelam Epdp Claims Ownership Jewelry

1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.

புலிகளின் வங்கி

அதேபோன்று, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகள் விவகாரம் : சர்ச்சையை கிளப்பும் ஈபிடிபி | Bank Of Tamil Eelam Epdp Claims Ownership Jewelry

இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.

அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.

எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். 

அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளபை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

Next Post

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

Next Post
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures